பாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள்!: அமைச்சர் துரைமுருகன் தகவல்..!!

வேலூர்: பாலாற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு பணிகள் தொடங்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தையும் மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் அவர் தொடங்கி வைத்தார். 

பின்னர் பேசிய துரைமுருகன், வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக கூறினார். தென்பெண்ணையில் மழை காலங்களில் வீணாகும் தண்ணீரை பாலாற்றில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பாலாற்றில் தேவையில்லாமல் வீணாகும் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு பணிகள் தொடங்கும் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டார்.

Related Stories: