அமெரிக்காவின் மிகப்பெரிய ரசாயன ஆலையில் பயங்கர தீ விபத்து!: வானை முட்டும் கரும்புகை..!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் அந்த நாட்டின் மிகப்பெரிய ரசாயன தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்பில் பொருட்செதம் ஏற்பட்டுள்ளது. சிகாகோவின் வடமேற்கில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் ராக்டன் நகரில் கேம்டூல் என்ற ரசாயன நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து விதமான இன்ஜின் ஆயில்கள், கிரீஸ் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

அமெரிக்க நேரப்படி காலை 7 மணி அளவில் இங்கு திடீரென தீ பற்றியது. ஆலையின் கூரையில் பற்றிய தீ சிறிது நேரத்தில் மொத்த ஆலையையே கபளீகரம் செய்தது. கொழுந்துவிட்டு எரிந்து வரும் தீயால் வானில் பல அடி உயரத்திற்கு புகை எழும்பி வருகிறது. தீயை அணைக்கும் முயற்சியில் ராக்டன் நகர தீயணைப்பு வீரர்கள் முயன்று வருகின்றனர். 

இந்த தொழிற்சாலையில் இருந்து 70 தொழிலாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், ஒருசிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். நாட்டிலேயே மிகப்பெரிய லூப்ரிகன் நிறுவனங்களில் ஒன்றான கேம்டூலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து குறித்து ராக்டன் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

Related Stories:

>