எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் - விழுப்புரம் வழித்தட ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், வருகிற 17 மற்றும் 24ம் தேதிகளில்  சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் (06063)  செல்லும் சிறப்பு ரயில், எழும்பூர்- தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு புறப்படும்.  அதேபோல் வருகிற 18 மற்றும் 25ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் (06064) வந்து சேரும் சிறப்பு ரயில், தாம்பரம் - எழும்பூர்  இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>