விஜயேந்திரருடன் எல்.முருகன் சந்திப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்திற்கு வந்தார். தொடர்ந்து, அங்குள்ள கோ சாலையில் உள்ள பசுக்களுக்கு உணவளித்த முருகன், ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.அப்போது, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு, மாநில அமைப்புசாரா தொழிலாளர் சங்க தலைவர் டி.கணேஷ், மாவட்ட பொதுச்செயலாளர் கூரம் விஸ்வநாதன், சங்கர மடம் சார்பில் ஸ்ரீகாரியம் விஸ்வநாத சாஸ்திரி,ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீகாரியம்  சுந்தரேச ஐயர்  ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>