2 டோஸ் போடாததால் 100 ஊசி போட வேண்டியதாயிற்று முகக்கவசம், தடுப்பூசி போடாததால் கொரோனாவில் பாதிக்கப்பட்டேன்: புதுவை முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி குருசுக்குப்பம் ஜிப்மர் நகர்ப்புற சுகாதார மையத்துக்கு மூன்று மாடியில் புதிய கட்டிடம் ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை திறந்து வைத்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:   நான் முகக்கவசமும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. சாதாரணமாக இருந்தேன். முதல்வராக பொறுப்பேற்கும் போது நானே தொற்றால் பாதிக்கப்பட்டேன். பிறகு சிகிச்சை பெற்று திரும்பினேன். நான் தடுப்பூசி போடாததால் பாதிக்கப்பட்டேன். தடுப்பூசி போட்டு, முகக்கவசம் அணிந்திருந்தால் தொற்று வந்திருக்காது. இவை இரண்டையும் செய்யாததால் தான் பாதிக்கப்பட்டேன்.  தடுப்பூசி தொடர்பாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள்  தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை கூறுகிறார்கள். வதந்தியை நம்பி தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கிறோம். தடுப்பூசியின் அவசியத்தை சரியாக மக்கள் உணரவில்லை.

தடுப்பூசி போடவில்லை என்றால், பெரிய சிரமம் ஏற்படும். 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் மருத்துவமனையில் எனக்கு 100 ஊசி போட்டார்கள். அந்த 2 டோஸை போட்டிருந்தால் எனக்கு பிரச்னை இருந்திருக்காது. கொரோனா வராமல் இருக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.  மத்திய அரசு நிச்சயமாக நமக்கு தேவையான தடுப்பூசியை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related Stories: