×

கோவை தெற்கு தொகுதியில் ‘தன லாபம்’ என சுவரில் எழுதி பாஜ எம்எல்ஏ அலுவலகம் திறப்பு: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கோவை: கோவை தெற்கு தொகுதியில் ‘தன லாபம்’ என சுவரில் எழுதி  பாஜ எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாஜ சார்பில், அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார். இத்தொகுதிக்கான எம்எல்ஏ அலுவலகம், மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகே உள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் அவரது கணவர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, எம்எல்ஏ அறையின் சுவரில் ‘ தன லாபம்’ என மஞ்சளில் எழுதி வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. கடைகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் திறப்பு விழாவின்போது ‘தன லாபம்’ என எழுதி திறப்பு விழா நடப்பது போன்று இவ்விழா நடந்தது. இந்த காட்சி, வழக்கத்துக்கு மாறாக இருந்ததால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.Tags : BJP ,MLA ,Coimbatore South , BJP MLA opens office in Coimbatore South: 'Viral'
× RELATED பீகாரில் பைக்கில் சென்ற மேயர்...