காங். பெண் எம்.பிக்கு கொலை மிரட்டல்: மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக இருப்பவர் ரம்மியா ஹரிதாஸ். நேற்று ஆலத்தூரில் உள்ள தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் ரம்மியா ஹரிதாஸ் காரில் இருந்து இறங்கி பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நாசர், உறுப்பினர் நஜீப் ஆகியோர் தகராறில் ஈடுபட்டதுடன், ‘‘தேவையில்லாமல் இங்கு வந்து நடிக்க வேண்டாம். இங்கு வந்தால் காலை வெட்டுவோம்’’ என்று கூறியதாக தெரிகிறது.  இதனால், 2 பேரையும் கைது செய்ய ேகாரி சாலையில் அமர்ந்து எம்பி போராட்டத்தில் ஈடுபட்டார்.

போலீசில் புகாரும் அளித்தார். இதையடுத்து போலீசார் நாசர், நஜீப் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா ஹரிதாஸ் கூறுகையில், ‘‘கடந்த பல மாதங்களாகவே மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் இருந்து தொடர்ந்து எனக்கு மிரட்டல் வந்து கொண்டிருகிறது. இந்த சம்பவத்தில் போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கவர்னரை சந்தித்து புகார் கொடுக்க உள்ளேன்’’ என்றார்.

Related Stories:

>