தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் எவ்வளவு? அரசாணை வெளியீடு

சென்னை: தனியார் ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  சாதாரண ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கி.மீக்கு 1,500ம்(அடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் 25), ஆக்சிஜன் வசதி ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கி.மீ 2000ம்(அடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் 50), உயர் ஆக்சிஜன் வாயு வசதி கொண்ட ஆம்புலன்ஸ்கள் முதல் 10 கி.மீக்கு 4000ம்(அடுத்த ஒவ்வொரு கி.மீக்கும் 100) கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதற்கான அரசானையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.  அதிக கட்டணம் வசூலித்தால் 104 உதவி எண்ணில் புகார் அளிக்கலாம். ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநரின் உரிமம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். உடனடியாக அந்த ஆம்புலன்ஸ் அரசால் பறிமுதல் செய்யப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>