2வது நாளாக சரிவு: தங்கம் சவரனுக்கு 320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று இரண்டாம் நாளாக குறைந்தது. நேற்று மட்டும் சவரனுக்கு 320 சரிந்தது. தங்கம் விலை கடந்த 2 மாதமாக ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒருநாள் விலை அதிரடியாக குறைந்தால், இரண்டு நாட்களில் மீண்டும் அதே வேகத்தில் உயர்ந்தும் வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு சவரன் 37,080க்கு விற்கப்பட்டது. சவரன் மீண்டும் 37 ஆயிரத்தை தாண்டியது. சனிக்கிழமை அதே வேகத்தில் தங்கம் விலை சரிந்தது. கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,605க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,840க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் இல்லாமல் சனிக்கிழமை விலையிலேயே விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது.

அதில் தங்கம் விலையில் அதிரடி சரிவு காணப்பட்டது. தங்கம் கிராமுக்கு 30 குறைந்து ஒரு கிராம் 4,575க்கும், சவரனுக்கு 240 குறைந்து ஒரு சவரன் 36,600க்கும் விற்கப்பட்டது. மாலையில் மேலும் தங்கம் விலை குறைந்தது. சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,565க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 36,520க்கும் விற்கப்பட்டது. இரண்டு நாட்களில் மட்டும் சவரன் 560 குறைந்துள்ளது. தங்கம் விலை குறைவு நகை வாங்குவோரை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories:

>