தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக திமுக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் திமுக எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்பி ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்படுகிறார். அவர் பதவியேற்கும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த பதவியில் இருப்பார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஏ.கே.எஸ்.விஜயன் (59), திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் 3 முறை நாகப்பட்டினம் தொகுதியில் திமுக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்றார். 1991ம் ஆண்டு திமுக ஒன்றிய துணை செயலாளராக, ஒன்றிய செயலாளராக இருந்தார்.

2004ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்எல்ஏ ஆவார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான பதவியாகும்.

Related Stories: