சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு: 3 மணி நேரம் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிமுக சட்டமன்ற கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும், பொருளாளராக கடம்பூர் ராஜூவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான தேர்வு பவ்வேறு விவாதங்களுக்கு இடையில் 3மணி நேரம் நடந்தது. தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடாவை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம் 12.20 மணிக்கு கூட்டம் நேற்று நடந்தது. மதியம் 12.15 மணிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவர் வந்ததும், கட்சி அலுவலகத்துக்கு வெளியே கூடி இருந்த தொண்டர்கள் அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகம் வந்தார். அவர் வந்தபோது, அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கா், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் கட்சி அலுவலகத்தின் கீழ் தளத்தில் உள்ள அறையில் சுமார் 40 நிமிடம் அமர்ந்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இதையடுத்து முதல் தளத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ்  உள்ளிட்ட மூத்த எம்எல்ஏக்கள் மதியம் 1 மணிக்கு சென்றனர். இதையடுத்து, எம்எல்ஏக்கள் கூட்டம் மதியம் 1.05 மணிக்கு தொடங்கியது. கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி துணை தலைவர் மற்றும் கொறடாவாக யாரை தேர்வு செய்யலாம்? என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை கூறினர். பெரும்பாலும் பேசிய கட்சி எம்எல்ஏக்கள், கட்சிக்குள் பிளவு ஏற்படும்

. இதை பயன்படுத்தி சசிகலா மீண்டும் அதிமுக கட்சிக்குள் நுழைய அதிக வாய்ப்புள்ளது. அதை தடுக்கஓ.பன்னீர்செல்வம் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். அதேபோன்று, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான எஸ்.பி.வேலுமணி அதிமுக சட்டமன்ற கட்சியின் கொறடாவாக தேர்வு செய்யப்பட வேண்டும். இரண்டு பேருக்கும் பொதுவாக உள்ள முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சட்டமன்ற பொருளாளராக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். இதை இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் மதியம் 3.20 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.

தேர்வானவர்கள் விவரம்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ,சட்டமன்ற கட்சியின் துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர் தொகுதி), கொறடா - எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர் தொகுதி), துணை கொறடா - க.ரவி (அரக்கோணம் தொகுதி), பொருளாளர் - கடம்பூர் ராஜூ (கோவில்பட்டி தொகுதி), செயலாளர் - கே.பி.அன்பழகன் (பாலக்கோடு தொகுதி), துணை செயலாளர் - பி.எச்.மனோஜ் பாண்டியன் (ஆலங்குளம் தொகுதி) ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதில், வேலுமணி, ரவி, கே.பி.அன்பழகன் ஆகியோர் எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்கள், மனோஜ் பாண்டியன் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: