முதல்வர் குறித்து அவதூறு பதிவு: நடிகர் செந்தில் புகார்

சென்னை: சென்னை வேப்பேரில்உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் விருகம்பாக்கம் பாஸ்கர் காலனியில் வசித்து வருகிறேன். சினிமாவில் கடந்த 40 ஆண்டுகாலமாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். கடந்த ஜூன் 12ம் தேதி எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் யாரோ சில விஷக்கிருமிகள் நான் பதிவு செய்தது போல் தமிழக அரசின் மீதும் தமிழக முதல்வர் மீதும் அவதூறான கருத்துகளை டிவிட்டரில் போலியாக பதிவிட்டுள்ளனர்.ஆகவே இவ்விஷயத்தில் எனது நற்பெருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான பதிவுகளை பதிவு செய்த நபர்களை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ேமலும், கடந்த ஜூன் 12ம் தேதி பெயரில் போலியாக வெளியான டிவிட்டர் பதிவை நீக்க தக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories:

>