×

ஹைட்ரோ கார்பன் திட்டம் முதல்வரின் நிலைப்பாட்டை பாமக வரவேற்கிறது: அன்புமணி தகவல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:  புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அத்தகைய திட்டங்களை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. மத்திய அரசும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதித்து, ஏலம் விடப்படும் ஹைட்ரோ கார்பன் வளங்கள் பட்டியலில் இருந்து திட்டத்தை நீக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Pama ,Chief Minister of ,Hydro , Pama welcomes the position of the Chief Minister of the Hydro Carbon Project: Anbumani Information
× RELATED அண்ணாமலை கூறுவதை நினைத்தால் சிரிப்பு வருது: கர்நாடகா முதல்வர் கிண்டல்