தென் மேற்கு பருவக் காற்று காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தென்மேற்கு பருவக் காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கேரளாவில் தற்போது தென் மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவானது. அது தற்போது வலுப்பெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இது தவிர நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று அந்த மாவட்டங்களில் மழை பெய்தது.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தற்போது கேரளாவில் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாகவும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் மழை பெய்யும்.  தென் மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில்ள்,மிதமான மழையும் பெய்யும்.

Related Stories: