ஆசிர்வாதம் செய்வதாக 15 ஆண்டுகளாக மாணவிகளை சீரழித்த விவகாரம்: சிவசங்கர் மீதான பாலியல் வழக்கு விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது

* டிஎஸ்பி குணவர்மன்,இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் விசாரணை அதிகாரிகள்

* உத்தரகாண்ட் மாநிலம் விரைந்தது தனிப்படை

சென்னை: சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட போக்சோ வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் தொடங்கி உள்ளனர். விசாரணை அதிகாரிகளாக சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தில் 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சுசில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி  நிறுவனர் பிரபல நடன சாமியார் சிவசங்கர் பாபா (72).  இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் பலர் அதன் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தினர்.  10 மற்றும் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் பொது தேர்வுக்கு முன்பும், பிற ஆன்மிக நிகழ்வு நாட்களிலும் சிவசங்கர் பாபாவிடம் ஆசிர்வாதம் பெற்றால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று பள்ளியின் ஆசிரியைகள் கூறி அழைத்து செல்வார்கள்.

அப்போது மாணவிகளை சிவசங்கர் பாபா     ஆசிர்வாதம் என்ற பெயரில் தனிதனியாக தனது அந்தரங்க அறைக்கு அழைத்து ெசன்று, அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அறையில் வெளிநாட்டு மதுபானங்கள், சாக்ெலட்டுகளை கொடுத்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததும்தெரிய வந்தது. 15 ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட மாணவிகளை சிவசங்கர் பாபா சீரழித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசார், முன்னாள் மாணவிகளின் புகாரின்படி போக்சோ உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

போலீசாரின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சிவசங்கர் பாபா, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நெஞ்சுவலி என உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர் காவல் துறையில் தொடர் புகார் அளித்து வருகின்றனர். அதேநேரம் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும் சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மாணவிகளிடம் நடத்திய ரகசிய விசாரணை மூலம் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பல முக்கிய ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. சிவசங்கர் பாபா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதாலும், மாணவிகளை ஆன்மிக சுற்றுலா என்று வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் உறுதியாகி உள்ளது. சிவசங்கர் பாபா பின்னணியில் பல முக்கிய பிரமுகர்கள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் இந்த வழக்கை டிஜிபி திரிபாதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அதைதொடர்ந்து வழக்கின் விசாரணை அதிகாரிகளாக சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  முதற்கட்டமாக சுஷில் ஹரி இண்டர்நேஷ்னல் பள்ளியில் உள்ள நிர்வாகிகளிடம் சிவசங்கர் பாபாவின் பாலியல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டப்பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை பெற்று வரும் சாமியார் சிவசங்கர் பாபாவை எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி போலீசார் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் தனிப்படை ஒன்று உத்தரகாண்ட் மாநிலம் விரைந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

டி.சி. கேட்டு பெற்றோர்

படையெடுப்பு:  12 ஆசிரியைகளும் விலகல் சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப் பள்ளி குறித்து எழுந்த பாலியல் புகாரால், அப்பள்ளியில் படிக்கும் மாணவியரின் பெற்றோர் நேற்று காலை 10 மணி முதலே ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு டி.சி. கேட்டு மனு அளித்தனர். இந்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை முன் கூட்டியே செலுத்திய சிலரும் தங்களின் கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்குமாறு கேட்டு மனு அளித்தனர்.  பள்ளி நிர்வாகம் பெற்ேறாரிடம் இருந்து மனுக்களை மற்றும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த 12 ஆசிரியைகள் தாங்கள் பள்ளியில் இருந்து விலக விரும்புவதாக தெரிவித்து விலகல் கடிதத்தை கொடுத்தனர்.

Related Stories: