×

பாமக பற்றி விமர்சனம் செய்த அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கம்: சசிகலாவுடன் பேசிய 17 பேருக்கும் கல்தா

சென்னை: பாமகவை விமர்சனம் செய்த கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 17 பேரும் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
தேர்தலில் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறை கூறுவது பாமகவுக்கு வழக்கமாக உள்ளது. சின்ன கட்சியான பாமக எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பாமகவால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று முன்தினம் சென்னையில் பேட்டி அளித்தார். இது, அதிமுக - பாமக கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை், கட்சிகட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வா.புகழேந்தி (அதிமுக செய்தி தொடர்பாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.

இதேபோன்று, கடந்த சில நாட்களாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக உறுப்பினர்கள் 17 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எம்.ஆனந்தன் (முன்னாள் அமைச்சர்), ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த வி.கே.சின்னசாமி (முன்னாள் எம்பி), வேலூர் மாநகர் மாவட்டத்தை சேர்ந்த எல்.கே.பி.எம்.பி.வாசு ,தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டத்தை சேர்ந்த தேவி பாண்டியன் (129வது வட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் விருகம்பாக்கம் வடக்கு பகுதி), தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த இ.ராஜேஷ்சிங் (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணை செயலாளர்), ஒட்டக்காரன் என்.ராஜு (சேப்பாக்கம் வடக்கு பகுதி மாணவர் அணி தலைவர்), என்.சதீஷ் என்ற கண்ணா (சேப்பாக்கம் வடக்கு பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை துணை தலைவர்) ஆகிய 17 பேர் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

Tags : Bamaka ,Khalta ,Sasikila , AIADMK spokesperson fired for criticizing Bamaka fired from party
× RELATED ஓய்வுக்கு பிறகு மீண்டும் பிரசாரம்: ராமதாஸ் கடிதம்