தமிழகம் முழுவதும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: அரசு நடவடிக்கை

சென்னை: கலெக்டர்கள் உள்பட அரசு துறைகளில் பணியாற்றும் 39 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு கலெக்டர் ஜான் லூயிஸ்,  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை பிரிவு இணை செயலாளராகவும், நாமக்கல் கலெக்டர் மேகராஜ், நகராட்சி மற்றும் வாட்டர் சப்ளை துணை இணை செயலாளராகவும், பத்திரப்பதிவுத்துறை ஐஜி சங்கர், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாகவும், திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாநில மனித உரிமை ஆணைய செயலாளராகவும், திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சி துறையின் சிறப்பு செயலாளர் கருணாகரன், மீன்வளத்துறை ஆணையராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வி கழக நிர்வாக இயக்குநராக இருந்த ஜெயந்தி, நில நிர்வாக இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை துணை செயலாளர் கற்பகம், வணிக வரித்துறை இணை கமிஷனராகவும், மின்னணு ஆளுமை ஆணையராக இருந்த சந்தோஷ் கே.மிஸ்ரா, போக்குவரத்து ஆணையராகவும், கரூர் கலெக்டர் பிரசாந்த் வட்நரே நிதித்துறை கூடுதல் செயலாளராகவும், தொழில்துறை கூடுதல் செயலாளர் சுந்தரவள்ளி, மாநில தேர்தல் ஆணைய செயலாளராகவும், கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் கிரேஸ் லால் ரிண்டிகி பச்சுவா, தொழில்துறை கூடுதல் ஆணையராகவும், நில நிர்வாக ஆணையராக இருந்த விபுநாயர், தொழில் முனைவோர் வளர்ச்சி வாரிய இயக்குநராகவும், தமிழ்நாடு பைபர் நெட் கழக நிர்வாக இயக்குநராக இருந்த ரவிச்சந்திரன், சிறுபான்மையினர் நல உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய இணை நிர்வாக இயக்குநர் சர்வான்குமார் ஜடாவத், தேர்தல் ஆணையத்தின் துணை தலைமை தேர்தல் அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை செயலாளராக இருந்த அமிர்தஜோதி, தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை இணை செயலாளராகவும், மாநில மனித உரிமை ஆணைய செயலாளராக இருந்த மகேஸ்வரி, குறு, சிறு, நடுத்தர தொழில் வாரிய சிறப்பு செயலாளராகவும், ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பழனிச்சாமி, நில நிர்வாக கூடுதல் கமிஷனராகவும், திருவாரூர் கலெக்டர் சாந்தா, நில நிர்வாக கூடுதல் ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி, கல்நடை மற்றும் பால்வளம், மீன்வளத்துணை இணை செயலாளராகவும், சமூக நலத்துறை ஆணையராக இருந்த ஆபிரகாம், விவசாயம் மற்றும் விவசாய நலன்துறையின் சிறப்பு செயலாளராகவும், கரூர் முன்னாள் கலெக்டராக இருந்து விடுமுறையில் சென்ற மலர்விழி, அறிவியல் நகர தலைவராகவும், ராமநாதபுரம் வளர்ச்சி மற்றும் திட்ட கூடுதல் கலெக்டராக இருந்த பிரதீப்குமார், பொதுத்துறை துணை செயலாளராகவும், சுற்றச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை இணைசெயலாளராக இருந்த அருண் சுந்தர் தயாளன், நிதித்துறை இணை செயலாளராகவும், தமிழ்நாடு காதி மற்றும் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அதிகாரியாக இருந்த சாந்தி, பட்டுவளர்ச்சி வாரிய(சேலம்) இயக்குநராகவும், நகர பஞ்சாயத்து இயக்குநராக இருந்த பழனிச்சாமி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டக்கலை மற்றும் பயிர் வாரிய இயக்குநராக இருந்த எஸ்.ஏ.ராமன், அருங்காட்சியக இயக்குநராகவும், நிர்வாக சீர்திருத்தத்துறை மற்றும் பயிற்சி முதன்மை செயலாளராக இருந்த ஹர்சகாய் மீனா, ஆவண மற்றும் வரலாற்று ஆய்வுத்துறை ஆணையராகவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் துறையின் நிர்வாக இயக்குநராக இருந்த ஹரிகரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குநராகவும், ஈரோடு கலெக்டர் கதிரவன், தமிழ்நாடு மேக்னசைட்(சேலம்) நிர்வாக இயக்குநராகவும், தொழில் நுட்ப கல்வி இயக்குநராக இருந்த விவேகானந்தன், ஆதி திராவிடர் வீட்டு வசதி கழக நிர்வாக இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில மேம்பாட்டு கொள்கை கவுன்சில் உறுப்பினர் செயலாளர் அனில்மேஸ்ராம், சிமென்ட் கழக நிர்வாக இயக்குநராகவும், சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குநராக இருந்த டி.பி.ராஜேஷ், கைத்தறி மற்றும் நூர்பாலை கூட்டுறவு கழக நிர்வாக இயக்குநராகவும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக உள்ள சரண்யா ஆரி, சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனராகவும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் கழிவு நீர் அகற்றல் வாரிய நிர்வாக இயக்குநராக இருந்த மகேஷ்வரன், வெளிநாட்டு வேலை வாய்ப்பு கழக நிர்வாக இயக்குநராகவும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ராஜாமணி, தமிழ்நாடு உப்பு வாரிய நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் ஆணையராக இருந்த பாஸ்கரன், கல்சார்வாரிய துணை தலைவராகவும், பால்வளத்துறை ஆணையர் நந்தகோபால், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராகவும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குநராக உள்ள தீபக் ஜேக்கப், மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநராகவும், வணிக வரித்துறை இணை ஆணையர் சாருஸ்ரீ, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: