×

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். 38 மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் நாளை முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொலி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

ஏற்கனவே 27 மாவட்டங்களுக்கு அதிக தளர்வுகளும் 11 மாவட்டங்களுக்கும் குறைவான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரக்கூடிய 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு இருக்கிறது. மாவட்ட வளர்ச்சி பணிகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசிக்கிறார். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் தலைமை செயலகத்தில் இருந்து பங்கேற்க உள்ளனர்.

இதில் தளர்வுகளுடன் உள்ள 27 மாவட்டங்களில் நோய் தொற்றின் நிலவரம் என்ன? ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொது போக்குவரத்தை விரைவில் தொடங்க வேண்டிய சூழல் உள்ளதாலும் இந்த ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே அடுத்த 21ஆம் தேதிக்கு பிறகு பொது போக்குவரத்து இருக்கும் என்று தெரிகிறது. என்வேர் அதற்காக கொரோனா தடுப்பு பணிகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து ஆராய்வதற்காக இந்த ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.



Tags : D.C. ,Corona ,Q. ,Stalin , corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...