மேற்கு வங்கத்தில் தளர்வுகளுடன் ஜூலை 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை  1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசின் 2வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. அதன்படி மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை  1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூலை 1 வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் இயக்க அனுமதி வழங்கப்படும். தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 வரை 25% பணியாளர்களுடன் இயங்கலாம். மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளார்.

Related Stories: