×

39 மனைவி, 94 மகன், மகள்களின் உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் மரணம்

ஐஸ்வா: மிசோரம் தலைநகர் ஐஸ்வா அடுத்த பக்தாங் கிராமத்தில் சியோங்ககா அகா சியோன் (76) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 39 மனைவிகள், 94 மகன், மகள்கள் மற்றும் 33 பேரன், பேத்திகள் உள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய குடும்பப் தலைவரான இவருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. கடந்த 3 நாட்களாக வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்ற நிலையில், நேற்று அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், இவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இவரது மரணத்துக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் லால்தன்வாலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Tags : Death of 39 wife, 94 son, daughters world largest family head
× RELATED 39 மனைவிகள், 94 குழந்தைகள் உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் மறைவு