பிளஸ் 2 மாணவிக்கு குழந்தை; ‘மாணவ தந்தை’அதிரடி கைது: பிரசவம் பார்த்த டாக்டருக்கு வலை

திருப்புத்தூர்: பிளஸ் 2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவன் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள கிராமத்தை 17வயது பிளஸ் 2 மாணவிக்கு, சக மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. மாணவன் புத்தகம் வாங்குவதாக கூறி, அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்தார். அப்போது இருவரும் ‘நெருங்கி பழகியதில்’ சிறுமி கர்ப்பமடைந்தார். இந்நிலையில் சிறுமியின் சகோதரி பிரசவத்திற்காக திருப்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் உதவிக்கு வந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. தொடர்ந்து அதே மருத்துவமனையில் அவருக்கு ஸ்கேன் எடுத்த பார்த்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால், பிரசவம் பார்க்குமாறு அவரது தந்தை மருத்துவமனையில் உள்ள டாக்டரிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கடந்த மாதம் 19ம் தேதி நடந்த பிரசவத்தில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதே மருத்துவமனையில் செல்வி என்பவர் நர்ஸாக வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாகம் பிரியாள் என்பவருக்கு குழந்தை இல்லை. எனவே செல்வி, சிறுமியின் தந்தையிடம் கூறி, குழந்தையை வாங்கி பாகம்பிரியாளிடம் வழங்கினார். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சைமன் ஜார்ஜ், திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சித்திரைச்செல்வி, சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான காளாப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியின் தந்தை, பிரசவம் பார்த்த டாக்டர், சிறுமியின் அத்தை, நர்ஸ் செல்வி (52), குழந்தையை வாங்கிய பாகம்பிரியாள் (40) ஆகிய 6 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தார். இதில் 17 வயது சிறுவன், சிறுமியின் தந்தை ஆறுமுகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள டாக்டர் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories:

>