×

மத்திய அரசு மீது முத்தரசன் தாக்கு

சேலம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் 2வது கொரோனா அலை மிக மோசமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால், அதை மத்திய அரசு சரியான முறையில் கையாளவில்லை. மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்குவதில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படவில்லை. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ேதர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு, தமிழக அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவை ₹12ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தது போல், தற்போது உள்ள அரசு அப்படி இருக்காது என்றார்.

Tags : Federal Government , Mutharasan attack on the central government
× RELATED இருவேறு கொரோனா தடுப்பூசிகளை கலந்து...