கேரளாவில் கனமழை: 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த 3ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடக்கத்தில் மழை குறைவாகவே பெய்தது. இந்த நிலையில் வங்காளவிரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து நேற்று முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று திருவனந்தபுரம், பாலக்காடு, கொல்லம் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இடிமின்னலுடன் பலத்த காற்றும் இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரபிக்கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நாளை வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>