ஐசிசி டெஸ்ட் தரவரிசை; நியூசிலாந்து மீண்டும் முதலிடம்

துபாய்: ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி நியூசிலாந்து மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட்கொண்ட  தொடரை 1-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில் பர்மிங்காமில் நடந்த 2வது டெஸ்ட்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 22 ஆண்டுக்கு பின் இங்கிலாந்து மண்ணில், டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து 123  புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது. இங்கிலாந்து 3வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு பின் தங்கியது.

டெஸ்ட் தரவரிசை பட்டியல்

த.வ.    -    அணி     -     புள்ளி

1     நியூசிலாந்து            123

2      இந்தியா             121

3    ஆஸ்திரேலியா         108

4    இங்கிலாந்து        107

5    பாகிஸ்தான்        94

6    வெஸ்ட் இண்டீஸ்    84

7    தென்ஆப்ரிக்கா    80

8    இலங்கை        78

9    வங்கதேசம்        46

10   ஜிம்பாப்வே         35

Related Stories:

>