மது கடத்தி வந்த 3 பேர் கைது: லாரி, கார் பறிமுதல்

திருவொற்றியூர்: சென்னை மணலி, எம்எப்எல் சாலை சந்திப்பு பகுதியில் மாதவரம் துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் மற்றும் கன்டெய்னர் லாரி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதையடுத்து கன்டெய்னர் லாரியில் சோதனை நடத்தியபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 45 மதுபானங்கள் அடங்கிய பெட்டி இருந்தது. அதில்வந்த இருவரையும் மணலி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில், திருப்பத்தூரை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் சத்யராஜ் (33), எண்ணூர், சக்திபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஏசுதாஸ் (27), ராம்குமார் (27) எனத் தெரியவந்தது.

கர்நாடாக மாநில மதுபானங்களை ஓசூர் வழியாக கன்டெய்னர் லாரியில் கடத்திவந்து மணலி விரைவு சாலையில் லாரியை நிறுத்தி, மதுபானங்களை காருக்கு மாற்றி, அதிக விலைக்கு விற்று வருவதாக ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து கன்டெய்னர் லாரி, கார் மற்றும் மதுபானங்கள் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>