சிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு ஆலைகள் மீண்டும் திறப்பு!: தொழிலாளர்கள் நிம்மதி..!!

விருதுநகர்: சிவகாசியில் 35 நாட்களுக்கு பிறகு பட்டாசு தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கொரோனா 2ம் அலை காரணமாக சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் கடந்த மே 10ம் தேதி மூடப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. 

33 சதவீத தொழிலாளர்களுடன் பட்டாசு ஆலைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தொழிலாளர்கள் வாகனங்கள் மூலம் பணிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலை வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்கும் அறைகளை வணங்கி ஊழியர்கள் தங்களது பணிகளை தொடங்கினர். 

தீபாவளிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதற்கு பட்டாசு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர். இதையடுத்து பண்டிகை கொண்டாட்டத்திற்கு தேவையான பட்டாசு ரகங்களை உற்பத்தி செய்துவிடலாம் என்று நம்பிக்கையில் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

Related Stories: