×

பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் சிறுவள்ளுவர் சாலை பிளாட்பாரம் பகுதியை சேர்ந்தவர் உமாபதி. இவரது மனைவி லட்சுமி (45). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மேரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் முற்றியதால்  ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு  வந்த மேரியின் கணவர் வெங்கடேசன் (46), லட்சுமியை தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் தகாதவார்த்தைகளால் லட்சுமி திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், லட்சுமி கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த லட்சுமியை  அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Man arrested for stabbing woman =
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது