புதுச்சேரியில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளி கல்வி கட்டண கொள்ளையை கண்டித்து திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவர்  சிவா, திமுக எம்.எல்.ஏக்கள் சம்பத், கென்னடி, செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். 

அப்போது தனியார் பள்ளி கட்டண கொள்ளையை கண்டித்தும், நீதிமன்றம் அறிவுறுத்திய கல்வி கட்டண முறையை அரசு அமல்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியர்கள் மத்தியில் பேசிய புதுச்சேரி திமுக சட்டமன்ற குழு தலைவர் ஆர்.சிவா, தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தை முறையாக பின்பற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். 

புதுச்சேரியில் கொரோனா காலத்திலும் ஆன்லைன் வகுப்பு மூலம் அனைத்து தனியார் பள்ளிகளும் வகுப்புகள் நடத்தி வருகின்றன. பேரிடர் காலத்திலும் அனைத்து பெற்றோர்களையும் கட்டணம் செலுத்தினால் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் என்று மிரட்டுவதாக புகார் எழுந்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக திமுக-வினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories:

>