×

நீட் தேர்வு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை தொடக்கம்

சென்னை: நீட் தேர்வு விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான  ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய தமிழக அரசு அமைத்த 9 பேர் கொண்ட குழு இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் இதுவரை தமிழக மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான உயர்நிலைக் குழுவையும் நியமித்தார். 


அந்த குழு, நீட் தேர்வின் பாதிப்பு பற்றி ஆராய்வதோடு மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாணவர் சேர்க்கை முறையை அரசுக்கு பரிந்துரைக்கும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார். நீட் தேர்வு விவகாரம் குறித்து ஏ.கே ராஜன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடங்கியது. முதல்வர் ஸ்டாலின் நியமித்த 9 பேர் கொண்ட குழு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றது. நீட் தேர்வின் தாக்கத்தை ஆராய்ந்து இக்குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Rajan , NEED EXAMINATION, JUDGE A.K.RAJAN, OFFICE
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு