×

பெருகும் கள்ளச்சாராயம்!: டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை...ப.சிதம்பரம் கருத்து..!!

காரைக்குடி: மதுக்கடைகள் இல்லையென்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பது தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகளை திறக்கவில்லை என்றால் கள்ளசாராயத்தின் புழக்கம் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். 


உலகம் முழுவதும் புகை பிடித்தலுக்கு எதிரான பிரச்சாரம் மூலம் புகைபிடிக்கும் பழக்கம் குறைந்து இருப்பதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மதுக்கடைகளை திறந்தாலும் மது குடிப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவது மூலம் மதுபழக்கத்தை ஒழுக்க முயலலாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது உள்ள சூழலில் தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறப்பதை தவிர தமிழக அரசுக்கு வேறு வழியில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். 


பெட்ரோல், டீசல் விலை உயர்வே கட்டுமான பொருட்கள் உட்பட அனைத்து அத்யாவசிய பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னதாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ப.சிதம்பரம் திறந்துவைத்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியை இருக்கையில் அமர வைத்ததுடன் வாசலில் மரக் கன்றையும் ப.சிதம்பரம் நட்டுவைத்தார். Tags : Tamil Nadu , Tasmac Store, Government of Tamil Nadu, P. Chidambaram
× RELATED தமிழகத்தில் மாவட்டம் தோறும் கிராம சபை...