சித்தூர் அருகே 5,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

சித்தூர் : சித்தூர் அருகே 5,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சித்தூர் அடுத்த கலிகிரி காவல் நிலைய போலீசாருக்கு பாளையம் கிராமம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதக ரகசிய தகவல் கிடைத்து.அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் லோகேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 10க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். போலீசார் வருவதை பார்த்த அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தவர்கள் தப்பிச்சென்றனர். இதையடுத்து, அங்கிருந்த 5 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல் வன பகுதியிலேயே அழித்தனர்.

Related Stories:

>