ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கள்ளச்சாராயம் தடுப்பு விழிப்புணர்வு நாடகம்

ஆம்பூர் : ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் கள்ளச்சாராய தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக நடந்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆம்பூர் தாசில்தார் அனந்த கிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் (தேர்தல் ) குமரவேல் முன்னிலை வகித்தார். கள்ளச்சாராயத்தை தடுத்தல், கள்ளச்சாராயத்தால் ஏற்படும் தீமைகள், உயிரிழப்பு ஆகியவை குறித்து திருப்பத்தூர் கோகுலகிருஷ்ணன் நாடக குழுவினர் நடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

ஆம்பூர் தாலுகாவில் மலைகிராமங்களான நாய்க்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்  தட்டு மற்றும் ஆந்திர தமிழக எல்லையோர கிராமங்களான அரங்கல்துருகம், குமாரமங்கலம் ஆகிய கிராமங்களில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Related Stories:

>