முக்கிய செய்தி சென்னை தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து: யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது; 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு Jun 14, 2021 டப்பர் கிஷோர் கே சுவாமிகள் சென்னை: முன்னாள் முதல்வர்கள், அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே சுவாமி கைது கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐடி விங் அளித்த புகாரின்பேரில் கிஷோர் கே சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து பதிவு செய்ததாகவும் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு உள்ளது. அதில் 2 வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.இருப்பினும் @sansbarrier என்ற இவரது டுவிட்டர் கணக்கு மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். பாஜக ஆதரவாளரான இவர், திமுக தலைவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தது வாடிக்கையாக இருந்தது. இந்த நிலையில்தான், முன்னாள் முதல்வர்கள், அறிஞர் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கிஷோர் பரப்பியதாக காஞ்சிபுரம் வடக்கு திமுக ஐடி விங் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கிஷோர் சுவாமி சங்கர் நகர் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்துள்ளார் நீதிபதி. இதையடுத்து கிஷோர் சாமி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி மீது போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலகம் விளைவித்தல், பொது அமைதிக்கு குந்தகம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்களுக்கு டோக்கன்: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறு: 8 ஒன்றிய அமைச்சர், 2 மாஜி முதல்வர், 1 மாஜி ஆளுநரின் எதிர்காலம் என்னாகும்?
மக்களவை தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% வாக்குகள் பதிவாகியுள்ளன: தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம் மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: ஓட்டுபோட்ட பின் செல்வப்பெருந்தகை பேட்டி
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
மக்களவை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37% வாக்குகள் பதிவு; அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 26.58%
மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு.! அதிகபட்சமாக கள்ளக் குறிச்சியில் 15.10% பதிவு
நாம் ஓட்டு போட்டோம் என்று கூறுவதில் மரியாதையும், கௌரவமும் இருக்கிறது: தனது வாக்கை நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 மக்களவை தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது: அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்..!
தமிழ்நாடு, புதுவையில் 40 மக்களவை தொகுதியிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: 1.50 லட்சம் போலீஸ், துணை ராணுவம் பாதுகாப்பு
நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு; மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.! பொது சுகாதாரத்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் இன்று 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தியுள்ளது: அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி
மக்களவை தேர்தலை ஒட்டி நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு
மக்களவை தேர்தலில் வாக்களிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளை வீட்டிலிருந்தே அழைத்துச் செல்ல இலவச வாகன வசதி: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்