சொல்லிட்டாங்க...

* கொரோனா முதல்கட்ட வைரஸ் சோதனை முடிந்துள்ள நிலையில், வூகான் நகரில் நடைபெற உள்ள 2ம் கட்ட சோதனைக்கு சீனா ஒத்துழைக்க வேண்டும். - உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம்

* தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான செலவினங்களை சமாளிக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியிலிருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூடுதல் பணம் தேவை. - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

* கொரோனா நோய் தொற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். - தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்

* நாங்கள் மக்களவை மற்றும் மாநில தேர்தல்களில் மட்டுமே உத்தி வகுக்கிறோம். தற்போதைய மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரேதான் தலைவராக நீடிப்பார். - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத்

Related Stories:

>