கழற்றி விட்ட கணவன் மீது திரிணாமுல் பெண் எம்பி குற்றச்சாட்டு நைட்டோடு நைட்டா பணம், நகைகளை எல்லாம் பிடுங்கிட்டாங்க... புதிய காதலனால் கர்ப்பமான புகைப்படம் வைரல்

கொல்கத்தா: எனது முன்னாள் கணவரும், அவருடைய குடும்பத்தினரும் எனது நகைகள், பணத்தை பறித்து கொண்டு விரட்டி  விட்டதாக பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.யுமான நுஸ்ரத் ஜகான் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல நடிகை நுஸ்ரத் ஜகான். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி.யாக இருக்கிறார். இவர், நிகில் ஜெயின் என்ற தொழிலதிபரை 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், கடந்தாண்டுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது, சினிமா நடிகரும், அரசியல்வாதியுமான யாஷ் தாஸ்குப்தாவை காதலித்து, அவருடன் வாழ்ந்து வருகிறார். அவர் 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இதனால், இந்த கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இது பற்றி கடந்த வாரம் பேட்டியளித்த நுஸ்ரத், ‘நிகிலுடன் செய்த திருமணம் இந்தியாவில் செல்லாது. கர்ப்பம் அடைந்திருப்பது எனது தனிப்பட்ட வாழ்க்கை. அதை பற்றி வெளியே சொல்ல முடியாது,’ என்றார்.

இந்நிலையில், ‘நிகிலும், அவருடைய குடும்பத்தினரும் பெரிய பணக்காரர்கள் என்று சொல்லி கொள்கிறார்கள்.ஆனால், திருமணத்தின் போது எனக்கு பெற்றோர் கொடுத்த நகைகள் அனைத்தையும் இரவோடு இரவாக அபகரித்து கொண்டனர். நிகிலை நம்பி எனது வங்கி கணக்குகளை ஒப்படைத்தேன். அதில் இருந்த பணத்தை எல்லாம் அவர் கையாடல் செய்து விட்டார், வங்கி கணக்குகளை முறைகேடாக கையாண்டுள்ளார்,’ என்று நுஸ்ரத் கூறியுள்ளார். தற்போது, தனது புதிய காதலானால் நுஸ்ரத் கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடுப்பான வயிற்றுடன் நுஸ்ரத் இருக்கும் புகைப்படம் அவருடைய கர்ப்பத்தை உறுதி செய்கிறது. இந்த புகைப்படத்தில் அவருடன் பெங்காலி நடிகை ஸ்ராபந்தி சட்டர்ஜி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

Related Stories:

>