கேரளாவில் பருவமழை தீவிரம்

திருவனந்தபுரம் : கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும், கடந்த ஒரு வாரமாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மழை  மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. வரும் 16ம் தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று திருவனந்தபுரம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நேற்று வயநாடு, பாலக்காடு ஆகிய 2 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 12 மாவட்டங்களிலும் பலத்த மழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதே போல் நாளை இடுக்கி, கண்ணூர், கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், 16ம்  தேதி கோழிக்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. கடல் கொந்தளிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

>