பொதுமக்கள், போலீசார் அதிர்ச்சி கேரளாவில் திடீரென வானில் வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா  பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்சூர் நகர பகுதியில் திடீரென 4 ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு பறந்தன. திடீரென கூட்டமாக ஹெலிகாப்டர்கள் பறந்து சென்றதால் பொது மக்கள் பீதி அடைந்தனர். இது தொடர்பாக பலர் காவல் நிலையங்களுக்கு போலீன் செய்து விவரம் கேட்டனர். ஆனால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இதை அறிந்த போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் திருச்சூரில் பணக்காரர்கள் சிலருக்கு, சொந்தமாக ஹெலிகாப்டர்கள், சிறிய விமானங்கள் உள்ளன. முழு ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக இவற்றை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து இயக்காமல் இருந்தால் பேட்டரி, உபகரணங்கள் பழுதாகி விடும். இதனால்தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதை அறிந்த பின்னரே போலீசாரும், பொது மக்களும்  நிம்மதி அடைந்தனர்.

Related Stories:

>