சின்ன கட்சி எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்க்க மாட்டோம் தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறைகூறுவது பாமகவின் வழக்கம்: அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேச பேட்டி

சென்னை: தோற்ற பிறகு கூட்டணி கட்சியை குறை கூறுவது பாமகவுக்கு வழக்கமாக உள்ளது. சின்னக் கட்சியான பாமக எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அந்த கட்சியால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆவேசமாக கூறினார். இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: எங்கள் கூட்டணியில் இருந்து கொண்டு, எங்களிடம் 23 இடங்களை பெற்ற பாமகவின் அன்புமணி தற்போது தேவை இல்லாத கருத்துகளை கூறி வருகிறாா். நாங்கள் கூட்டணியில் இல்லையென்றால் 20, 25 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்றெல்லாம் கூறுகிறாா். அவர் முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாமக 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் தோற்றது ஏன் என்பதை முதலில் பாமக ஆய்வு செய்யட்டும். ஆனால் அது உங்களின் உட்கட்சி விவகாரம்.

அதில் யாரும் தலையிடமாட்டோம். ஆனால் எங்கள் கட்சியை பாா்த்து 20, 25 இடங்களில் தான் வெற்றி பெற்றிருக்கும் என்று பேசுவது முறையானது அல்ல. நாங்கள் ஓபிஎஸ்சை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்று அன்புமணி கூறுகிறாா். ஓபிஎஸ் கையெழுத்திட்டு பாமகவுக்கு  ராஜ்யசபா சீட் கொடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் ஓட்டுகளால் தான் அன்புமணி ராஜ்யசபா எம்பி ஆனாா். எனவே அன்புமணி தொடா்ந்து இதேபோல் தவறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தோற்ற பிறகு கூட்டணி கட்சியினரை குறைகூறுவது பாமகவுக்கு வழக்கமாக உள்ளது. கூட்டணியில் நீடிப்பதா, வெளியேறுவதா என்பதை அவர்கள்தான் முடிவு ெசய்ய வேண்டும். பாமக பேச்சு - குறிப்பாக அன்புமணி பேச்சு சரியில்லை. பாமக ஒரு சிறிய கட்சி. அவா்கள் அதிமுகவை கேலி செய்வதை வேடிக்கை பாா்க்க மாட்டோம். பாமகாவால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. இவ்வாறு புகழேந்தி கூறினாா்.

Related Stories: