×

சில்லி பாய்ண்ட்...

* கிரெஜ்சிகோவா இரட்டை சாம்பியன்!
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் முறை சாம்பியனாகி முத்திரை பதித்த செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (25 வயது), இரட்டையர் பிரிவிலும் சக வீராங்கனை கேதரினா சினியகோவாவுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - பெதானி மேட்டக் சேண்ட்ஸ் (அமெரிக்கா) ஜோடியுடன் நேற்று மோதிய செக். இணை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தியது. கோப்பையுடன் சினியகோவா - கிரெஜ்சிகோவா உற்சாகமாக போஸ் கொடுக்கின்றனர். இவர்கள் இருவரும் 2013 பிரெஞ்ச் ஓபனில் சிறுமியர் இரட்டையர் பிரிவு சாம்பியன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* நியூசிலாந்து நம்பர் 1
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை வென்றதை அடுத்து, டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி 123 தரப்புள்ளிகளுடன் நம்பர் 1 அந்தஸ்தை பெற்றது. இந்தியா (121), ஆஸ்திரேலியா (108), இங்கிலாந்து (107), பாகிஸ்தான் (94) அடுத்த இடங்களில் உள்ளன.

Tags : Silly Point ...
× RELATED ஜீரோ பாயிண்ட் வந்தடைந்தது 4 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர்