மத்திய அரசு வழங்கிய 1 கோடி தடுப்பூசியில் 96 சதவீதம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது: சென்னை, கோவை, செங்கல்பட்டில் அதிக அளவு வழங்கப்பட்டுள்ளது

திருச்சி: மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்கிய 1 கோடி தடுப்பூசியில் 96 சதவீதம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் அளவில் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி நிலவரப்படி தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது 136 நாளில் தமிழ்நாடு இந்த இலக்கை எட்டியுள்ளது. கடந்த 12ம் தேதி வரை தமிழ்நாட்டில் 1,01,30,594 பேரு தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

கடந்த 8ம் தேதி வரை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு மொத்தம் 1,01,63,960 தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. இதில் 97 லட்சத்து 62 ஆயிரத்து 957 தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 88 லட்சத்து 53 ஆயிரத்து 690  தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதில் 88,42,760 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு 13  லட்சத்து 10 ஆயிரத்து 270 தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி உள்ளது. 13,08,680 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் 8ம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகள் 96 சதவீத தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில் சென்னை,கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதிக அளவிலான தடுப்பூசிகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னைக்கு வழங்கப்பட்ட 22,70,090 தடுப்பூசியில் 21,45,356 மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக கோவைக்கு வழங்கப்பட்ட 6,69,670 தடுப்பூசியில் 6,67,174 செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் 8ம் தேதி மத்திய அரசு வழங்கிய தடுப்பூசியில் 96 சதவீதம் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதில் அரியலூர், ஈரோடு,சிவகாசி, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தியுள்ளது.

Related Stories: