சென்னையில் உள்ள கோயில் சொத்துகளை கண்டறியும் கூட்டம்: இன்று நடைபெறுகிறது

சென்னை: சென்னையில் உள்ள கோயில் சொத்துகளை கண்டறிவது தொடர்பான கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. அறநிலையத்துறை சென்னை 2வது மண்டல இணை ஆணையர் ரேணுகா தேவி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழநி முருகன் திருக்கோயில் ஆகியவற்றின் இணை, துணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து, வருவாய்துறை மற்றும் அறநிலையத்துறை சார்ந்த அலுவலர்களை கொண்டு குழு அமைத்து, அதன் தற்போதைய நிலை மற்றும் ஆக்கிரமிப்பில் இருந்தால் மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ஆணையர் உத்தரவின் அடிப்படையில் கோயில் நிலங்களை கண்டறிய குழு ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாவட்ட வடக்கு மற்றும் தெற்கு மண்டல வருவாய் கோட்டாட்சியர்கள், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்கள் மற்றும் திருக்கோயில் செயல் அலுவலர்கள் ஆகியோர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 14ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு நடைபெறும் ஒருங்கிணைந்த சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: