கன்டெய்னரில் கடத்திய மதுபாட்டிகள் பறிமுதல்

திருவொற்றியூர்: மணலி எம்எப்எல் சந்திப்பு அருகே நேற்று முன்தினம் இரவு மாதவரம் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை போலீசார், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி அதன் ஓட்டுனரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் லாரியை சோதனை செய்தனர். அதில், வெளிமாநில மதுபாட்டில்கள் 45 இருந்தன. விசாரணையில், பெங்களூருவில் இருந்து மதுபானங்களை, கன்டெய்னர் லாரியில் கடத்தி வந்து, மணலி விரைவு சாலையில், காருக்கு மாற்றி, சட்டவிரோதமாக, விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுனரான, திருப்பத்துாரை சேர்ந்த சத்யராஜ் (33) மற்றும் எண்ணுார் சக்திபுரத்தை சேர்ந்த ஏசுதாஸ் (27), ராம்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 45 மதுபான பாட்டில்கள், கார் மற்றும் கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>