தமிழகத்தில் ஒரேநாளில் 14,016 பேருக்கு கொரோனா: 2 மாவட்டங்களில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு; சிகிச்சை பலனின்றி 267 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் சிகிச்சை பலனின்றி 267 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று 1,68,663 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 14,016 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 25,895 பேர் நேற்று குணமடைந்தனர். இதுவரை 21,74,247 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 267 பேர் நேற்று உயிரிழந்தனர். இதனால், மொத்தம் 29,547பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய மொத்த பாதிப்பில் கோவை 1,895, ஈரோடு 1,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>