சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட 24 மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்: மேலும் 21 ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு மாற்றம்; தமிழக அரசு உத்தரவு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பல கலெக்டர்களை பல்வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்ட உத்தரவு: ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் கவிதா ராமு, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இணை மேலாண் இயக்குநர் கோபால சுந்தர ராஜ், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். ராமநாதபுர கலெக்டராக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் முரளிதரன், தேனி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.

தமிழ்நாடு சாலை திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். அரசு இணை செயலாளர் பொதுத்துறை, ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குனர் டாக்டர். ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.  சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு மாநில சந்தை வாரியம் மேலாண்  இயக்குநர்  மோகன், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை மாநகராட்சி மத்திய மண்டல இணை ஆணையர் ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். கோவை மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன், வேலூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குனர் முருகேஷ், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.  ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் அமர் குஷ்வா, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்படுகிறார்.

விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர்(வருவாய்) ஸ்ரேயா சிங், நாமக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு மின் வாரிய இணை மேலாண் இயக்குனர் வினீத், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமணா சரஸ்வதி, அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய இயக்குனர் பிரபு சங்கர், கரூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யபடுகிறார். பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) மேகநாத ரெட்டி, விருதுநகர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். ஆதிதிராவிடர் நலத்துறை மேலாண் இயக்குனர் விஜயராணி, சென்னை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்படுகிறார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர் சந்திரகலா, தென்காசி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி, ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். வணிகவரித்துறை இணை ஆணையர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்படுகிறார்.

* துறைகளுக்கு புது ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

நாகப்பட்டினம் கலெக்டர் பிரவீன் பி.நாயர் ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனராக  நியமிக்கப்படுகிறார். டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன், சமக்ர சிகஷா திட்டத்தின், மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை வேளாண் துறை  இயக்குனராக நியமிக்கப்படுகிறார். வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் கூட்டுறவு சங்க பதிவாளராக நியமிக்கப்படுகிறார். திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்படுகிறார். கோவை கலெக்டர் நாகராஜன் நில நிர்வாகத்துறை ஆணையராக நியமிக்கப்படுகிறார். திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராக நியமிக்கப்படுகிறார். திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி, சுற்றுலாத்துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். வணிக வரித்துறை கூடுதல்  ஆணையர் லட்சுமி பிரியா, தொழில்நுட்ப கல்வி இயக்குனராக நியமனம்  செய்யப்படுகிறார்.

நில அளவை மற்றும் தீர்வு துறை ஆணையர் செல்வராஜ், பேரூராட்சி ஆணையராக நியமிக்கப்படுகிறார். சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட  இயக்குனர் லதா, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு மேகனசைட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் பிருந்தா தேவி, தோட்டக்கலைத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். தொழிலாளர் ஆணையர் வள்ளலார், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையராக மாற்றப்படுகிறார். முதலமைச்சர் தனிப்பிரிவின் தனிஅதிகாரி சரவணவேல்ராஜ், நகர திட்டமிடல் துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். பட்டுவளர்ப்புத்துறை இயக்குனர் வினய், நில அளவை  மற்றும் தீர்வு துறை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். மீன்வளத்துறை ஆணையர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையராக மாற்றம் செய்யப்படுகிறார். அரியலூர் கலெக்டர் ரத்னா, சமூக நலத்துறை  இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மேலும், தமிழ்நாடு சால்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் மேலாண் இயக்குனர் அமுதவல்லி, ஒருங்கிணைந்த  குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். குறைதீர் நிவாரணம் மற்றும் இ-கவர்ன்ஸ் தனி அதிகாரி கே.எஸ்.கந்தசாமி, ஆவின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் பாஸ்கர பாண்டியன் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், விடுப்பில் சென்று மீண்டும் பணியில் இணைந்துள்ள அன்சுல் மிஷ்ரா, சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக நியமிக்கபட்டுள்ளார். நில நிர்வாகத்துறை கூடுதல் ஆணையர் மரியம் பல்லவி பல்தேவ், தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

வேளாண் துறை இயக்குனர் தக்‌ஷிணாமூர்த்தி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்த ராவ் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் விஜயராஜ் குமார், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்படுகிறார். தேர்தல் ஆணைய இணை தலைமைத் தேர்தல் அதிகாரி அஜய்  யாதவ், எலக்ட்ரானிஸ் கார்ப்ரேஷன் மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மாநில தொழிற்சாலைகள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனராக ஆனந்த் நியமிக்கப்படுகிறார். உள்துறை மற்றும் கலால் வரித்துறை இணைச்செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு பாடநூல் நிறுவன கழக மேலாண் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். மதுரை மாவட்ட திட்ட அலுவலர், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா தமிழ்நாடு பெண்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக பதவி வகித்த சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குனராக  நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: