×

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது: 25,895 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை !

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 14,016 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியே 94 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 14,016 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,839 பேர் ஆண்கள், 6,177 பேர் பெண்கள்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 927 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 272 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று 267 பேர் உயிரிழந்துள்ளார். 80 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 187 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,547 ஆக அதிகரித்துள்ளது. இன்று 25,895 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,74,247 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 935 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,25,009ஆக உள்ளது. சென்னையில் நேற்று 73 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,68,663 ஆக உள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 2,92,05,623 ஆக உள்ளது.


Tags : Tamil Nadu ,Health Department , Tamil Nadu, Corona, Department of Health
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...