×

டெல்லியில் சில ஊரடங்கு தளர்வுகள்: ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு பயணிகளுடன் இயங்கமுதல்வர் கெஜ்ரிவால் அனுமதி

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊர்க்கு நடைமுறைகளில் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். டெல்லியில் 50 சதவிகித பயணிகளுடன் பேருந்துகள் இயங்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதியளித்துள்ளார். ஆட்டோ, இ-ரிக்ஷா, டாக்ஸிகள், இரண்டு  பயணிகளுடன் இயங்கமுதல்வர் கெஜ்ரிவால் அனுமதி வழங்கியுள்ளார்.

வாராந்திர சந்தை அனுமதிக்கப்படுகிறது, ஆனால் ஒரு மண்டலத்திற்கு 1 சந்தை மட்டுமேஇயங்கி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விருந்து அரங்குகள், ஹோட்டல்கள் போன்ற பொது இடங்களில் திருமணங்களுக்கு அனுமதி இல்லை, நீதிமன்றத்தில் அல்லது 20 பேருக்கு மேல் இல்லாத வீடுகளில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

இறுதிச் சடங்குகளில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். அத்தியாவசிய நடவடிக்கைகள் தொடரும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50சதவிகித பணியாளர்களுடன் இயங்கும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். அனைத்து சந்தை வளாகங்களும், மால்களும் இப்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை முழுமையாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒரு வாரத்திற்கு கண்காணிக்கப்படும்,  நோய்த்தொற்று அதிகரித்தால், மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும், இல்லையெனில், அது தொடரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Gejriwal , Some curfews in Delhi: Chief Minister Arvind Kejriwal approves auto, e-rickshaw, taxis, two-passenger
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...