×

11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகளுடன் தேநீர்க் கடைகள் இயங்க அனுமதி: தமிழக அரசு

சென்னை: மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் 14.06.2021 முதல் தேநீர்க் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி மைக்களில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


மேலும் பேக்கரிகள், உணவகங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது போல இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம். இங்கும் பார்சல் முறை மட்டும் விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் நலன் கருதி அரசு அலுவலகங்ளிலிருந்து சான்றிதழ் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14.06.2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்பணிகளுக்காக அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்கள் சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணி தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும், பணித் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  



Tags : Tamil Nadu ,Government of TN , Tea Shops, Operating, Permission, Government of Tamil Nadu
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...