முக்கிய செய்தி சென்னை மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி; நாளை முதல் 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு Jun 13, 2021 TN அரசாங்கம் சென்னை: மதுக்கடைகள் திறப்பின்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா முன்னெச்சரிகை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. மதுக்கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தத் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் தமிழக அரசு கூறியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளிட்ட சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளது. மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. சில்லறையாக தான் விற்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும். கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி வசூலிக்க காங்கிரஸ் கட்சி திட்டம்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
பிரதமர் மோடியின் நண்பர்களிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு 90% மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்: ராகுல்காந்தி வாக்குறுதி
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது; திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை..!!
பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடல்
ஏற்றம் காணும் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ரூ.53,840-க்கு விற்பனை..!!
கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்; நீதிமன்றத்தில் ஏ.எஸ்.பி., பல்வீர்சிங் ஆஜராகவில்லை: விசாரணை ஒத்திவைப்பு
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார்