பெட்ரோல், டீசல் விலை உயர்வு மோடி அரசு மக்களுக்கு துரோகம்: மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலக்குழுக் கூட்டம் இணையவழியில் நேற்று மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், சவுந்தரராசன், வாசுகி,  சம்பத் மற்றும் மாநில செயற்குழு மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ஒவ்வொரு நாளும் உயர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இவற்றின் விலை உயர்வால் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இத்தகைய கடுமையான விலைவாசி உயர்வால் அவதிப்படும் மக்களின் நிலையை குறித்து கண்டு கொள்ளாமல் இருப்பதோடு, தொடர்ச்சியாக துரோகமிழைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது மோடி தலைமையிலான பாஜஅரசு.  மேலும் மதுபான கடைகளை திறப்பது எனும் முடிவு மீண்டும் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடக் கூடாது. எனவே தமிழக அரசு எடுத்துள்ள மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட வேண்டும்.

Related Stories:

>