மதுரையில் ரூ.70 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்தால் மக்கள், மாணவர்களுக்கு அதிக பயன்: தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் பாராட்டு

மதுரை: மதுரை, எம்.கே.புரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் தனித்தன்மை வாய்ந்த நூலகம் மற்றும் காட்சியகங்கள் அமைக்க உத்தரவிடுமாறு கூறியிருந்தார். பொது நூலகத் துறை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 8 சிறப்பு நூலகங்கள் அமைக்க முடிவு செய்து, தற்போது 7 சிறப்பு நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளன என கூறப்பட்டிருந்தது.  நேற்று இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முடித்து வைத்தனர். அப்போது நீதிபதிகள், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, மதுரையில் ரூ.70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. இதனால், தென் மாவட்ட மக்கள் அதிகம் பயனடைவர். குறிப்பாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன் தரும். அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதைப் போல மதுரையில் அமையப்போகும் நூலகம் இருக்கும். அரசுக்கு எங்களது பாராட்டு எனக் கூறினர்.

Related Stories:

>